1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 5 மே 2022 (11:49 IST)

சேகர் ரெட்டிக்கு எதிரான அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி

sekhar reddy
சேகர் ரெட்டிக்கு எதிரான அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் திடீரென தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
வருமான வரி சோதனயின்போது பல கோடி ரூபாய் சிக்கிய வழக்கில் சேகர் ரெட்டியிடம் அமலாக்கத் துறை கடந்த சில நாட்களாக விசாரணை செய்து வருகிறது
 
இந்த நிலையில் இந்த விசாரணை நடத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் சற்றுமுன் அமலாகத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது
 
கடந்த 2016ஆம் ஆண்டு சேகர் ரெட்டி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடந்தது. இந்த சோதனையின் அடிப்படையில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது