1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. one to nine standard school students holiday

1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

students
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் விரைவில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு தொடங்க உள்ளது 
 
இந்த நிலையில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது 
 
கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக தேர்வு அன்று மட்டும் மாணவர்கள் பள்ளிக்கு வந்தால் போதும் என்றும் அதுவரை வீட்டிலேயே இருந்து மாணவர்கள் தேர்வுக்கு தயாராகவும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது 
 
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை இறுதி தேர்வுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அறிவிக்கப்பட்ட நாட்களில் மட்டுமே தேர்வுகள் நடைபெறும் என்றும் பிற நாட்களில் வகுப்புகள் ஏதும் நடைபெறாது என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது
 
 
அடுத்த கட்டுரையில்
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்று கொடுக்கும் கூகுள்: புதிய ஒப்பந்தம்