வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 14 மார்ச் 2019 (08:32 IST)

பொள்ளாச்சி விவகாரத்தால் மாணவர்கள் போராட்டம்: கல்லூரிகளுக்கு விடுமுறை

பொள்ளாச்சியில் அப்பாவி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்த கயவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று கல்லூரி மாணவர்களும், மாணவிகளும் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டட்தை அடக்க போலீசார் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தியதால் அவர்களுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன
 
இந்த நிலையில் பாலியல் கொடூர விவகாரத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளின் போராட்டத்தை தடுக்க பொள்ளாச்சியில் சில தனியார் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உடுமலை சாலை, பாலக்காடு சாலையில் உள்ள தனியார் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இருப்பினும் மாணவர்கள் ஒரு குழுவாக பொது இடத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுவதால் பொள்ளாச்சி பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தை முதன்முதலில் வெளியே கொண்டு வர காரணமாக இருந்த புகாரளித்த மாணவியின் வீடு இருக்கும் பகுதிக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் விவகாரம் அந்த பகுதியில் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் நகர் முழுவதும் பரபரப்புடன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது