பொள்ளாச்சி பாலியல் விவகாரம் : இன்னொரு பெண் புகார் : இளைஞர் கைது

pollachi
Last Updated: புதன், 13 மார்ச் 2019 (19:22 IST)
பொள்ளாச்சியில் சில தினங்களுக்கு முன் இளம் பெண்களை பாலியல் வீடியோ எடுத்து மிரட்டியதாக திருநாவுக்கரசு, நாகராஜ், சபரிராஜ், செந்தில் ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கு சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டுள்ளது, தற்போது இன்னொரு பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பாலா என்பவரை போலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள அத்துணை விஐபிகளையும் கைது செய்ய வேண்டும் என்று இப்போது பொள்ளாச்சியில் மாணவ - மாணவிகள் மனித சங்கிலி அமைத்து போராட்டம் நடத்தி வந்தனர். இதற்கு போலிஸார் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தி ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வருகின்றனர்.
 
இன்று காலையில் ஒரு பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இந்நிலையில் தற்போது இன்னொரு பெண் புகார் அளித்ததன் பேரில் கோவையைச் சேர்ந்த பாலா எனபவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
அந்த பெண் கூறியுள்ளதாவது :
 
மூன்று வருடமாக தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக்கூறி தன்னை தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து அதை வீடியோ எடுத்ததாக கூறியுள்ளார்.இந்த சம்பவத்தால் அங்கு பரபரபு ஏற்பட்டது.


இதில் மேலும் படிக்கவும் :