செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 24 செப்டம்பர் 2020 (15:30 IST)

அக்.1 முதல் மாணவர்கள் விருப்பத்தின்பேரில் பள்ளிக்கு வரலாம் - தமிழக அரசு

கடந்த ஆண்டு  சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலகமெங்கும் கொரொனா வைரஸ் தொற்று பரவத் தொடக்கியது. கொரொனா தொற்றைக் குறைக்க அரசு ஊரடங்கு அமல்படுத்தியது.

இந்நிலையில் 140க்கும் மேற்பட்ட நாட்களாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் தற்போது தளர்வுகளுடன்  கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில்  எப்போது பள்ளிகள் திறக்கும் என்ற கேள்வி எழுப்பிய நிலையில் மாணவர்களுக்கு ஆன்லை வழி ஆசிரியர்கள் பாடம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தமிழக அரசு அக்டோபர் 1 முதல் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள பள்ளிக்கு வரலாம் என அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறிது அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பி, ஒவ்வொரு ஆசிரியர் குழுவும் இரு நாட்களுக்கு ஒருமுறை பள்ளிக்கு வரலாம். அரசு மற்றும்தனியார் பள்ளி மாணவர்கள் விருப்பம் இருந்தால் பள்ளிக்கு வராலாம், கொரொனொ கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வெளியே உள்ளா பள்ளிகளுக்கு அவர்கள் செல்லலாம் என்று அவர்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.