1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (11:20 IST)

கல்லூரி சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய அரசின் ஸ்காலர்ஷிப்! – உயர்கல்வித்துறை அறிவிப்பு!

Scholarship
தமிழகத்தில் கல்லூரிகள் முதலாம் ஆண்டு வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்கள் மத்திய அரசின் உதவித்தொகை பெறுவது குறித்து உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்து தேர்வு முடிவுகளும் வெளியானது. அதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பல லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் கவுன்சிலிங் முறையில் அவர்களுக்கு சீட் ஒதுக்கப்பட்டு தற்போது கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகளும் நடந்து வருகிறது.

இந்நிலையில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவது குறித்த அறிவிப்பை உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி மத்திய அரசின் உதவித்தொகை பெற விரும்பும் தகுதி வாய்ந்த மாணவர்கள் www.scholarships.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆகஸ்டு 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.