1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Modified: செவ்வாய், 21 ஜூன் 2022 (23:47 IST)

அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் கோரிக்கை

karur
திராவிட ஆட்சியின் ரோல் மாடலில் அரசுகலைக்கல்லூரியில்  பள்ளி மாணவர்களின் நலனில் கவனம் செலுத்தும் தமிழக அரசு கல்லூரி மாணவர்களின் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டுமென்று கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் கோரிக்கை - 
 
அரசுக்கலைக்கல்லூரியில்  நடந்து கொள்ளும் துறைத்தலைவரின் செயலால் மாணவர்கள் கொந்தளிப்பு
 
தமிழக அளவில் உள்ள அரசுகலைக்கல்லூரியில் மிகுந்த துடிப்புடனும், வேகமுடனும் ஏன் ? அறிஞர் அண்ணா காலத்தில் கொண்டு வந்த அரசுகலைக்கல்லூரி என்றால் கரூர் தாந்தோன்றிமலை அரசு கலைகல்லூரி தான், இப்படி பட்ட, அரசுகலைக்கல்லூரியில் ஏதாவது துறைரீதியாக, தினந்தோறும் ஒரு பஞ்சாயத்து வந்து கொண்டிருக்கும் வேலையில், தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்த உடன் சில சிக்கல்கள் தீர்ந்துள்ளன. அதுமட்டுமில்லாமல், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பயின்ற கல்லூரியும் ஆகும் என்பதினால் இந்த கல்லூரியில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை தலைவர் அரசு கலைக்கல்லூரியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் உள்ளார். 
 
கல்லூரிக்கு சென்றால், தலைமுடியை நன்கு திருத்தி வெட்டி வரச்சொல்வது மற்றும் ஐ.டி கார்டு போட்டு வருவது என்று சொன்னால் போதும், அதை சொல்லாமல், அதிகார தோனியில் மாணவர்களிடம் இருந்து அதாவது, முடிவெட்டி வந்த மாணவர்களையும், ஐ.டி கார்டு அணியாமல் வந்த மாணவர்கள் தங்களது தவறுகளை திருத்தி கொண்டாலும், அவர்களது ஐ.டி கார்டுகளை பறித்து கொள்வது, நீண்ட நாட்களுக்கு பின்னர் திருப்பித்தருவது, தண்ணீர் அருந்த சென்றாலும், ரெஸ்ட் ரூம் சென்றாலும், கேள்விகள் ஏதும் கேட்காமல், சட்டையை பிடித்து ஐ.டி கார்டுகளை பறித்து செல்வது தான் இவரது வாடிக்கையாம், மாணவர் ஒருவர் மாணவியிடம் பேசினால் அதனை கொச்சைபடுத்துவதும், தவறாக சித்தரிப்பதோடு, வெளியே சென்று ரூம் போட்டு பேசிக் கொள்ளுங்கள் என்று தவறான அர்த்தத்தில் கேலியும், கிண்டலுமாய் பேசுவதும், மிகுந்த கீழ்த்தரமாக பேசுவது மாணவச்சமுதாயத்தினை மிகவும் கொச்சைபடுத்துவதுமாய் அமைந்துள்ளது என்றும் இது சம்பந்தமாக மாணவர்களிடம் பலமுறை மன்னிப்பும் கேட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல், தாழ்த்தப்பட்ட மாணவர்களை மிகவும் கொச்சைப்படுத்தி பேசி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. 
 
இதே போல, அரசு கலைக்கல்லூரியின் வளாகத்தில் உள்ள வரலாற்றுத்துறை மாணவர்களை துரத்தி சென்று சட்டையை பிடித்து தரதரவென்று இழுத்து வந்தது மட்டுமில்லாமல், அந்த மாணவர்கள் அவரிடம் இருந்து தப்பிக்க, கல்லூரியின் வளாகத்தில் உள்ள சுவர் ஏறி குதித்து ஓடியுள்ளனர். கல்லூரி நிர்வாகம் அந்த மாணவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுத்துள்ளது. இவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, அதுமட்டுமில்லாமல், இவர் மதரீதியாகவும், மாணவர்களிடையேயும், பேராசிரியர்களிடமும் செயல்பட்டு வருகின்றார். இந்த கல்லூரியே தன்னுடைய கல்லூரி என்று நினைத்து கொண்டு நான் நினைத்தால் மட்டுமே நீங்கள் ( மாணவர்கள் ) தேர்ச்சி பெற முடியும், இல்லையென்றால், ஒழுங்கு நடவடிக்கை குழுவால், கல்லூரியினை விட்டு இடைநீக்கம் செய்து விடுவேன் என்று சக மாணவ, மாணவிகளை மிரட்டி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. கல்லூரியில் உள்ள மாணவிகளை கண்டாலே இந்த துறை பேராசிரியருக்கு பிடிக்காதாம், இவர், கல்லூரியில் சிறப்பாக வேலை செய்து கொண்டிருந்த அனைத்து பேராசிரியர்கள் மீதும், தவறான கருத்துக்களை மாணவர்களிடம் பரப்பி விடுவது மட்டுமில்லாமல், கல்லூரியின் முதல்வர் போல செயல்பட்டு வரும் இவரது செயல் மாணவர்களிடமும், பிறத்துறை பேராசிரியர்களிடமும் மனவருத்தத்தினை ஏற்படுத்தி வருகின்றது. இதுமட்டுமில்லாமல், பெண் மாணவிகளிடம் கூறும் போது, எங்களுக்கு கல்லூரிக்கு வருவதற்கே பிடிக்க வில்லை, என்றும் இவரது செயல் அநாகரீகமாக இருப்பதாகவும், ஆகவே தான் நீண்ட நாட்களாகவே மன உளைச்சலிலும், மன வேதனையுடனும் கல்லூரிக்கு சென்று வருவதாகவும் மன வலியுடன் கல்லூரிக்கு வருவதாகவும் கூறுகின்றனர். இது சம்பந்தமாக கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும் ஜாகீர் உசேன் என்கின்ற இவருக்கும், தள்ளுமுள்ளும், வாக்குவாதங்களும் பலமுறை ஏற்பட்டுள்ளதாம், எனவே தமிழக அரசு இவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, துறைரீதியான நடவடிக்கை உடனடியாக எடுத்து தமிழக முதல்வரின் நற்பெயரை காக்க வேண்டுமென்றும் மாணவச்சமுதாயங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக விரைவில் நீதிமன்றமும் செல்ல இருக்கும் மாணவ சமுதாயத்திற்கு துறைரீதியாக, இந்த கல்லூரியின் பேராசிரியர் ஜாகீர் உசேன் மீது நடவடிக்கை பாய வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்துள்ளது.