திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 13 ஜூலை 2022 (20:13 IST)

காய்கறி வாங்கினால் தக்காளி, தேங்காய் இலவசம்...மக்கள் மகிழ்ச்சி

Tomato

சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி பேரூராட்சியில் இயங்கும் உழவர் சந்தையில் காய்கறி வாங்கினால் 1 கிலோ தக்காளி மற்றும் தேங்காய் இலவசம் என திமுக நகரச் செயலாளர் கதிர்வேல் அறிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி உழவர் சந்தையில் ரூ.200 க்கு காய்கறிகள் வாங்கும்  பொதுமக்களுக்கு ஒரு தேங்காய் மற்றும் ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்குவதாக விவசாயிகள், வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

வரும் ஜூலை 15 ஆம் தேதி வரை இந்த நடைமுறை இருக்கும் என உழவர் சந்தை மற்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.