புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 28 செப்டம்பர் 2020 (09:44 IST)

ஃப்ரெண்டுன்னுதானே நம்பி வந்தேன்.. மாணவிக்கு நிகழ்ந்த கொடூரம்!

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி ஒருவரை அவரது உடன் படிக்கும் மாணவர்களே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரியில் லாரி ஓட்டுனராக வேலைபார்த்து வரும் ஒருவரின் மகள் அங்குள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த மாணவிக்கும், உடன் படிக்கும் மாணவன் ஒருவனுக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் அந்த மாணவன், மாணவியை ஆற்றங்கரைக்கு வர சொல்லி அழைத்துள்ளான். அங்கு மாணவியின் அனுமதி இல்லாமலே மாணவன் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதை மறைந்திருந்து மற்றொறு மாணவன் வீடியோ எடுத்து சக மாணவர்களுக்கும் ஷேர் செய்துள்ளான்.

இதுகுறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதை தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்ட மூன்று மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவியை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.