செவ்வாய், 25 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 27 செப்டம்பர் 2020 (13:27 IST)

இப்பவே உதயநிதிக்கு தொகுதி ஒதுக்கியாச்சா? – தயாநிதிமாறன் சூசகம்!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் உதயநிதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என தயாநிதிமாறன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் மறைந்த முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் நினைவாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நாடாளுமன்ற எம்பி தயாநிதி மாறன் சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலினை வேட்பாளராக்க வேண்டும் என்று பேசினார்.

இதற்கு பதிலளித்துள்ள உதயநிதி ஸ்டாலின் ”சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக நிற்கும் தகுதி எனக்கு உள்ளதா என்பதை திமுக தலைவரும், தமிழக மக்களுமே முடிவு செய்ய வேண்டும்” என கூறியுள்ளார். ஆனால் சேப்பாக்கம் இல்லாவிட்டாலும் எதிர்வரும் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.