ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 27 செப்டம்பர் 2020 (14:45 IST)

”முடிஞ்சா எங்க ஆட்சியில பெரியார் மேல கை வெச்சு பாருங்க” – கே.என்.நேரு சவால்!

திருச்சியில் பெரியார் சிலை மீது காவி வண்ணம் பூசிய விவகாரத்தில் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருச்சி அருகே உள்ள இனாம்குளத்தூர் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் காவி சாயம் பூசி அவமரியாதை செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இனாம்குளத்தூரில் உள்ள பெரியார் சிலைக்கு திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து பேசிய அவர் “சிலர் கட்சி வளர்ப்பதாக எண்ணி திராவிட இயக்க தலைவர்கள் மீது பொய்யான பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர். தொடக்கத்திலேயே பெரியார் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. திமுக ஆட்சியின்போது முடிந்தால் அவர்கள் பெரியார் சிலையை தொட்டு பார்க்கட்டும்” என சவால் விடுக்கும் தோனியில் பேசியுள்ளார்.