வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 14 மார்ச் 2023 (14:38 IST)

சென்னை ஐஐடி வளாகத்தில் ஆந்திர மாணவர் தற்கொலை: காவல்துறை விசாரணை..!

Chennai IIT
சென்னை ஐஐடி வளாகத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
 
சென்னை ஐஐடி வளாகத்தில் அவ்வப்போது மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு நடைபெற்று வருகிறது என்பதும் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புஷ்பக் ஸ்ரீசாய் என்பவர் சென்னை ஐஐடியில் பிடெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. 
 
மாணவர் புஷ்பாக் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து  காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva