வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 14 மார்ச் 2023 (08:38 IST)

'லிவ் இன்' முறையில் வாழ்ந்துவந்த விமான பணிப்பெண் தற்கொலை.. காதலன் கைது..!

காதலனுடன் லிவ் இன்' ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த விமான பணிப்பெண் ஒருவர் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் அவரது காதலனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். 
 
இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த அர்ச்சனா என்ற இளம் பெண் விமான பணிப்பெண்ணாக பணி செய்து வருகிறார். இவருக்கும் ஆதேஷ் என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக காதல் ஏற்பட்டது என்பதும் இருவரும் திருமணம் செய்யாமல் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்ததாகவும் தெரிகிறது. 
 
இந்த நிலையில் ஆதேஷூடன் பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அர்ச்சனா திடீரென நேற்று இரவு 12 மணி அளவில் நான்காவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
 
இதனை அடுத்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் ஆதேஷை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். அர்ச்சனாவை ஆதேஷ் தள்ளிவிட்டு கொலை செய்தாரா?  என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva