1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai meteorological center says about rain

அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

மழை
அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வருகிறது என்பதும் கோடை காலத்துக்கு முன்பே வெயில் கொளுத்த தொடங்கிவிட்டது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
மேலும் தமிழகத்தில் தற்போது வறண்ட வானிலை நிலவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னையை பொருத்தவரை மழை இருக்க வாய்ப்பு இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் சில இடங்களில் மேகமூட்டம் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
2 ஆஸ்கர் விருதும் தென்னிந்தியர்களின் உழைப்பு.. மத்திய அரசுக்கு சம்பந்தமில்லை: மல்லிகார்ஜுன கார்கே