வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 29 ஜூன் 2024 (16:21 IST)

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை..! போக்சோவில் ஆசிரியர் கைது..!!

Sexual
தர்மபுரியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த  ஆசிரியரை  காவல்துறையினர் போக்சோ சட்டப்பிரிவில் கைது செய்தனர்.  
 
தர்மபுரி மாவட்டம் பொம்மிடியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் தர்மபுரி ஆட்டுக்காரன்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆட்டுக்காரன்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், ஆசிரியர் சரவணன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக தர்மபுரி மகளிர்  காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
 
அந்த புகாரின்பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை ஏற்கெனவே இறந்து விட்டார். தாயின் பராமரிப்பில் இருந்து வந்த அந்தச் சிறுமிக்கு, ஆசிரியர் சரவணன் அவ்வப்போது கல்வி மற்றும் குடும்பச் செலவுக்கான உதவிகளைச் செய்து வந்துள்ளார்.

இதனால் மனைவியிடம் அவர் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். அந்தச் சிறுமி, பிளஸ்2 படிப்பை சமீபத்தில் நிறைவு செய்தார். அதன்பிறகு ஆசிரியர் சரவணனுடன் அவர் சரியாகப் பேசாமல் இருந்துள்ளார். இதனிடையே மாணவியை ஆசிரியர் சரவணன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அந்த ஆசிரியரைக் காவல்துறையினர் போக்சோ சட்டப்பிரிவில் கைது செய்தனர். ஆசிரியர் சரவணனுக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளதும் அவருடைய மனைவியும் அரசுப்பள்ளி ஆசிரியர் என்பதும் தெரிய வந்துள்ளது.