1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 24 ஜூன் 2024 (17:23 IST)

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெறிசெயல்..!!

Sexually
மகாராஷ்டிராவில் 13 வயது சிறுமியை, அவரது தந்தை மற்றும் உறவினர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், குழந்தைகளுக்கான பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது, குட் டச், பேட் டச் பற்றி பாடம் நடத்தியபோது, அந்தப் பள்ளியில் பயின்று வரும் 13 வயது சிறுமி தனக்கு நேர்ந்த அவலத்தைப் பற்றி பயிற்சி நடத்துபவரிடம் தெரிவித்தார்.
 
அதில் அந்தச் சிறுமி தனது தந்தை, தூரத்து உறவினர் முறையிலான சகோதரன் மற்றும் மாமாவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக  கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அவர்கள் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தினர்.
 
அந்த விசாரணையில், கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் சிறுமி அவரது தூரத்து உறவினர் முறையிலான சகோதரனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வெளியே சொன்னால், சிறுமியைக் கொலை செய்துவிடுவேன் என்று அவர் மிரட்டியுள்ளார். அதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 2024ஆம் ஆண்டு சிறுமி அவரது மாமாவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

 
மேலும் அந்த சிறுமி அவரது தந்தையால் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.