1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 19 ஜூன் 2024 (12:16 IST)

பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியை திருமணம் செய்த இளைஞர்.. 15 நாட்கள் ஜாமீன்..

marriage
16 வயது சிறுமியை 23 வயது இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் அந்த சிறுமிக்கு 18 வயது நிறைந்த உடன் அவரை திருமணம் செய்து கொள்ள சம்மதித்ததை அடுத்து திருமணத்திற்காக 15 நாட்கள் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் கடந்த சில மாதங்களுக்கு முன் பதினாறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிக்கு 18 வயது நிரம்பிய நிலையில் இரு வீட்டாரும் சமாதானமாக பேசி இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

இது குறித்த தகவல் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட நிலையில் திருமணத்திற்காக 15 நாட்கள் மட்டும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம் திருமண சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் அவர் மீதான போக்சோ சட்டத்தின் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் அவர் தாயானதாகவும் இதனை கணக்கில் கொண்டே இருவீட்டாரும் பேசி திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது

Edited by Mahendran