அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது??
தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஜூன் 13 முதல் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளதாக தகவல்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகளில் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வருகிறது.
முன்னதாக 1 முதல் 9 வகுப்புகளுக்கான தேர்வுகள் நடந்துள்ளது. தேர்வுகள் இந்த மாத இறுதிக்குள் முடிவடையும் நிலையில் பள்ளிகள் மறுதிறப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளோடு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார்.
அதன்பிறகு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளதன்படி 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் ஜூன் 13 ஆம் தேதி தொடங்கப்படும். 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 20 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 27 ஆம் தேதியும் பள்ளிகள் தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியது.
இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஜூன் 13 முதல் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. கடந்த காலங்களில் மாணவர் சேர்க்கை பள்ளி திறப்புக்கு முன்பே தொடங்கும் நிலையில் இந்தாண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.