கேரளாவில் 2 அல்லது 3 நாட்களில் தென்மேற்கு பருவமழை!
கேரளாவில் 2 அல்லது 3 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை மையம் தகவல்.
பொதுவாக ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்ற நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்தது. அதன்படி கடந்த 15 ஆம் தேதி அந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.
இதனைத்தொடர்ந்து வருகிற 27 ஆம் தேதி முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும் தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது கேரளாவில் 2 அல்லது 3 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்தது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறு தென்படுவதாக தெரிவிக்கப்பட்டது. கடந்தாண்டு ஜூ 3 ஆம் தேதி துவங்கிய நிலையில் இந்தாண்டு ஓரிரு நாட்கள் முன்னதாகவே பருவமழை துவங்குகிறது.