1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (16:23 IST)

ஓடும் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி மாணவர் பலி...

விழுப்புரத்தில், தனியார் பேருந்தில் இருந்து கீழே இறங்கும்போது, பள்ளி மாணவர் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே பேருந்து வந்தபோது, மாணவர் அனீஸுடன் வந்தவர்கள் ஓடும் பேருந்தில் இருந்து கீழே இறங்கியுள்ளனனர். அப்ப்போது, அனீஸ் இறங்க முற்பட்டபோது, நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

அவர் கீழே விழுந்த வேகத்தில் பேருந்தின் பின் பக்கச் சக்கரத்தில் சிக்கி அனீஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் சிசிடிவி காட்சிப் பதிவுகளைக் கொண்டு விசாரண செய்டனர்.

இதன் அடிப்படையில்,மாணவர் அனீஸ் பேருந்தின் படியில் நின்ரு பயணம் செய்ததுள்ளார், கீழிறங்கும்போது நிலைதடு மாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கியுள்ளார்.
.
இந்தச் சம்பவத்தை அடுத்து, மாணவரின் உறவினர்கள், பேருந்து மீது கற்களால் தாக்கி கண்ணாடிகளை உடைத்துள்ளனர்.