வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 31 ஜூலை 2022 (09:47 IST)

புதுக்கோட்டையில் திடீரென சாய்ந்த தேர்: 5க்கும் மேற்பட்டோர் காயம்!

pudhukottai
புதுக்கோட்டையில் திடீரென சாய்ந்த தேர்: 5க்கும் மேற்பட்டோர் காயம்!
புதுக்கோட்டை அருகே திடீரென தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் 5க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன
 
புதுக்கோட்டையில் கோகர்ணேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்றும் தேர்த் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தேரை பக்தர்கள் உற்சாகமாக இழுத்து வந்தனர். அப்போது திடீரென தேர் குடை சாய்ந்தது.
 
இதில் இடிபாடுகளில் சிக்கி ஐந்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயமடைந்து இருப்பதாகவும் படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
புதுக்கோட்டையில் தேர் சாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தேரின் அடித்தளம் சரியாக அமைக்கப்படவில்லை என்றும் அதனால்தான் இந்த விபத்து நேரிட்டதாக விழா அமைப்பாளர்கள் மீது பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்