செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 8 அக்டோபர் 2019 (19:39 IST)

தமிழக நதிகளை இணைக்க ரூ.3 லட்சம் கோடி போதும்: மாணவியின் அசத்தல் ஐடியா

தமிழக நதிகளை இணைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக தமிழக அரசியல்வாதிகள் பலர் கூறி வருகின்றனர். தமிழக நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு தான் ஒரு கோடி ரூபாய் தர தயாராக இருப்பதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நதிகளை இணைக்க கூடாது என்று சமூக ஆர்வலர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்

அதே நேரத்தில் தமிழக நதிகளை கால்வாய்கள் மூலம் இணைக்க வேண்டும் என்றால் 30 லட்சம் கோடி செலவாகும் என ஏற்கனவே கணக்கிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த அரங்கம்பாளையம் என்ற கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மாணவி ஒருவர் ’நதிகளை இணைக்க 30 லட்சம் கோடி ரூபாய் தேவை இல்லை என்றும் மூன்று லட்சம் கோடியில் நதிகளை இணைக்கலாம் என்றும் ஒரு சூப்பர் ஐடியாவை தெரிவித்துள்ளார்

நதிகளை கால்வாய்கள் மூலம் இணைக்காமல் நிலத்துக்கு அடியில் குழாய்களை பதித்து அதன் மூலம் இணைத்தால் நதிகளை இணைக்கும் செலவு மிகவும் குறைவாகும் என்றும், இந்த திட்டத்திற்கு 3 லட்சம் கோடி போதும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மாணவியின் இந்த கண்டுபிடிப்பு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நதிகள் இணைப்பு குழுவினர் ஆராய்ந்து இது சாத்தியமா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகிறது. இதனை அடுத்து இந்த சூப்பர் ஐடியா கொடுத்த மாணவிக்கு இஸ்ரோ அழைப்பு விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது