1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 8 அக்டோபர் 2019 (07:37 IST)

மாணவிகளை குறிவைத்த சர்வதேச போதைப்பொருள் கும்பல் கைது!

தற்போது உள்ள மாணவ, மாணவியர் சிலர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் பெரும் கவலை தெரிவித்து வருகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் ஒழுக்கமாக இருந்தாலும் ஒருசில மாணவர்கள் இவ்வாறு பாதை தவறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே அவர்களின் எண்ணமாக உள்ளது

இந்த நிலையில் மதுபோதை மட்டுமின்றி போதைப்பொருட்களையும் மாணவ, மாணவிகளுக்கு விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்றை போலீசார் கைது செய்துள்ளனர்

சென்னை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களில் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளை போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பல் குறிவைத்துள்ளதாகவும், குறிப்பாக மாணவிகளை போதைப்பழக்கத்திற்கு அடிமையாக்க இந்த கும்பல் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், அப்படிப்பட்ட சர்வதேச கடத்தல் கும்பல் ஒன்றை நெல்லூர் போலீஸ் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

போதை பொருள் கடத்தல் கும்பலை, வாகன சோதனையின் போது தற்செயலாக பிடித்த நெல்லூர் போலீசார் அவர்களிடம் விசாரணை செய்தபோதுதான் அவர்கள் சர்வதேச கடத்தல் கும்பல் என தெரிய வந்ததகவும், கைது செய்யப்பட்ட கும்பலில் ஒருவர் சென்னையை சேர்ந்தவர் என்றும், அவர்களிடம் இருந்த போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் நெல்லூர் போலீசார் தெரிவித்துள்ள்னர்.