1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Strange object fallen from space

இரவு நேரத்தில் வானிலிருந்து விழுந்த மர்ம பொருள்! – திருக்கழுக்குன்றத்தில் பரபரப்பு!

Tamilnadu
திருக்கழுக்குன்றம் பகுதியில் இரவு நேரத்தில் பிரகாசமாக ஜொலித்தபடி மர்ம பொருள் ஒன்று விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள வடக்குப்பட்டு கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் ஆடுகள் வளர்த்து வந்த நிலையில் வானிலிருந்து பிராகசமான வெளிச்சத்தோடு மர்ம பொருள் ஒன்று அப்பகுதியில் விழுவதை கண்டுள்ளார்.

இதுகுறித்து உடனடியாக அவர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அப்பகுதிக்கு விரைந்த விஏஓ மற்றும் போலீஸார் 10 கிலோ எடை கொண்ட அந்த மர்ம பொருளை ஆய்வுக்கு உட்படுத்த எடுத்து சென்றுள்ளனர். வானத்திலிருந்து விழுந்த மர்ம பொருள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
9 முதல் 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு?? – அமைச்சர் தீவிர ஆலோசனை!