செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 22 மே 2020 (19:17 IST)

அம்பான் புயல் தாக்கத்தால் ....100 அடிக்கு உள்வாங்கிய கடல்...?

திருச்செந்தூரில் கடல் திடீரென 100 அடிக்கு உள்வாங்கியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சமீபத்தில் வங்கக் கடல் ஒட்டியுள்ள பகுதிகளில் அம்பான் புயல் பாதிப்பு ஏற்பட்டது குறிப்பாக மேற்குவங்காளம், ஒடிஷா ஆகிய பகுதிகளில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று தமிழகம் திருச்செந்தூரில் உள்ள கடல் 100 அடிக்கு  மேல் உள்வாங்கியது. அதனால் தண்ணீர் அடியில் இருந்த பாறைகள் வெளியே தெரிந்தன.

வங்கக்கடலில் உருவான புயல் காரணமாக கடல் இன்று உள்வாங்கியிருக்கலாம் என தெரிகிறது

பல நேரத்திற்கு மேல் கடல் உள்வாங்கியும் இன்னும் இயல்புக்கு திரும்பவில்லை என்பதால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.