ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் உண்ணாவிரதம் - மன்சூர் அலிகான் பங்கேற்பு

khan
Last Updated: சனி, 5 மே 2018 (11:40 IST)
ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில், நடிகர் மன்சூர் அலிகான் பங்கேற்றுள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், மாணவ அமைப்பினரும் 84வது நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே  உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 
 
# ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்
 
#ஸ்டெர்லைட் ஆலையால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண  நிதி
 
# ஸ்டெர்லைட் நிறுவன தலைவர் மற்றும் உயர் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்
 
# தூத்துக்குடி மக்களுக்கு சிறப்பு மருத்துவகுழு அமைக்க வேண்டும்
 
# மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்
cas
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர், பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் போரட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தில் நடிகர் மன்சூர் அலிகான் கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :