செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 13 மே 2021 (08:55 IST)

ஸ்டெர்லைட் ஆக்ஸிஜன் தமிழகத்திற்கு மட்டும்தான்! – தொடங்கியது சப்ளை!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி தொடங்கிய நிலையில் இன்று விநியோக பணிகள் தொடங்கியது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகளால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையில் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு எழுந்துள்ளது. இந்நிலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடை போக்க தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் தற்காலிகமாக ஆக்ஸிஜன் தயாரிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் நேற்று முதலாக ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் இன்று ஆக்ஸிஜன் விநியோக பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் முன்னதாக நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் ஸ்டெர்லைட்டில் தயாரிக்கப்படும் ஆக்ஸிஜன் தமிழக தேவைக்கே மட்டும் பயன்படுத்தப்படும் என கூறியுள்ளார்.