வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 12 மே 2021 (23:54 IST)

ரோஜா மலரின் அற்புத மருத்துவ பயன்கள் !!

ரோஜா மலரானது இதய நோய்களில் இருந்து நம்மைக் காக்கிறது. இதன் இதழ் புண்களை ஆற்றும். உடல் பலம் தந்து இதயம், நரம்புமண்டலத்திற்கு நன்மை தருகிறது. தொண்டைநோய், சளி, இருமல், சுவாசநோய், நாவறட்சியைக் குணமாக்கும்.
 
ரோஜா இதழ்களில் உள்ள துவர்ப்புச் சுவை, வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும். ரோஜாப் பூவினால் தயாரிக்கப்படும் ‘குல்கந்து’ மலச்சிக்கலுக்கு மிகச் சிறந்தது.
Ads by 
 
ரோஜா இதழ்களை அப்படியே மென்று சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். குல்கந்தை சாப்பிட்டால் ரத்தம் சுத்தமடைந்து சருமம் பளபளப்பாகும்.
 
உஷ்ணம் காரணமாக ஏற்படும் வயிற்றுவலி நீங்க இது உதவும். ரோஜா இதழில் தயாராகும் பன்னீர், மயக்கத்தையும், மனக்கவலையையும் போக்கும்.
 
ரோஜாப் பூவைக் கொண்டு தயார் செய்யப்படும் இனிய சுவையுள்ள சர்பத், ரத்த விருத்திக்கு பயனுள்ள ஒரு டானிக் ஆகும். இந்த ரோஜாப் பூ சர்பத் உடல்  உஷ்ணத்தை எப்போதும் நீக்கி புதிய உற்சாகத்தை அளிக்கும்.
 
ரோஜாவில் சர்க்கரை, துவர்ப்பு, வைட்டமின் சி ஆகியவை அதிகம் உள்ளன. ரோஜா எண்ணெய் புண்களை ஆற்றும். காதுவலி மற்றும் பல் ஈறுகளில் ஏற்படும் புண்ணுக்கும் இதைப் பயன்படுத்தலாம்.
 
ரோஜா இதழ்களை தேவையான அளவு சேகரித்து சம அளவு பாசிப்பயறு சேர்த்து நாலைந்து பூலாங்கிழங்கையும்  உடன் வைத்து விழுதாக அரைத்து அதை உடல்  முழுவதும் தேய்த்து சிறிதுநேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தேய்த்துக் குளித்தால் உடல் கவர்ச்சிகரமான நிறம் பெரும். சரும நோய்கள் நீங்கும்.
 
ரோஜா சர்பத்தை அருந்தினால் மூலச்சூடு, மலச்சிக்கல், குடலில் புண் குணமாகும். ரோஜா இதழ்களை ஆய்ந்து ஒரு கையளவு எடுத்து பாத்திரத்தில் போட்டு, 1  டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அதில் பாதியை எடுத்துச் சர்க்கரை சேர்த்து காலை, மாலை குடித்துவந்தால் மலச்சிக்கல் விலகும்.ம் அண்மையில்