மனித உரிமை செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி மரணம்!

மனித உரிமை செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி மரணம்!
siva| Last Updated: திங்கள், 5 ஜூலை 2021 (15:22 IST)
மனித உரிமை செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி மரணம்!
மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி என்பவர் மும்பையில் மரணம் அடைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
எல்கர் பரிஷத் வழக்கில் மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி என்பவர் மரணமடைந்தார் என சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது.
சிறையிலிருந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி அவர்களுக்கு உரிய மருத்துவ வசதி கிடைக்கவில்லை என புகார் எழுந்தது.

இதனை அடுத்து சற்றுமுன் ஸ்டேன் சுவாமி அவர்களுக்கு உரிய மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் ஸ்டேன் சுவாமி மரணம் அடைந்தார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

திருச்சியை சேர்ந்த ஸ்டேன் சுவாமிஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினர் உரிமைக்காக குரல் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் மேலும் படிக்கவும் :