1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 3 ஜூலை 2021 (15:38 IST)

என்ஜாய் எஞ்சாமி பாடல் பாடிய பிரபலம் திடீர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்!

பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் கூட்டணியில் வெளியான வீடியோ பாடல் என்ஜாய் எஞ்சாமி. இப்பாடல் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடல் ஏ.ஆர்.ரஹ்மான் இண்டிபெண்டண்ட் கலைஞர்களுக்கான உருவாக்கியுள்ள மாஜா என்ற தளத்தில் உருவாகியது.

இப்பாடலுக்கு கர்ணன் பட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மகள் தீ இசையமைத்து தயாரித்தார். இப்பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று பல கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது. இப்படியான நேரத்தில் இந்த பாடலை பாடிய இசைக்கலைஞர்களில் ஒருவரான ஒப்பாரி பாடும் பாட்டி பாக்கியம்மா உடல் நலக்குறைவு காரணமாக காலமாகிவிட்டதாக  பாடகர் அறிவு தனது இன்ஸ்டாவில் அந்த பாட்டி ஒப்பாரி பாடல் பாடிய ஒரு வீடியோவை வெளியிட்டு வருந்தியுள்ளார். அம்மாவின் மறைவுக்கு பாடகி தீ,  உள்ளிட்ட இசையுலகினர் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.