புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 5 ஜூலை 2021 (09:53 IST)

அமெரிக்காவை சுட்டெரிக்கும் வெயில்; 95 பேர் மரணம்!

கடந்த சில வாரங்களாக அமெரிக்கா, கனடா பகுதிகளில் அனல் வெயில் சுட்டெரிப்பதால் பலர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களாக அமெரிக்காவின் வடமேற்கு பிராந்தியங்கள் மற்றும் கனடாவில் முன்னெப்போதும் இல்லாத அளவில் அனல் காற்றும், வெயிலும் வீசி வருகின்றது. அதிகபடியான வெப்பத்தை தாங்க இயலாமல் மக்கள் இறக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் வெயில் மற்றும் அனல் காற்றால் அமெரிக்கா மற்றும் கனடாவில் 500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் வடமேற்கு பிராந்தியமான ஒரேகானில் ஒரே வாரத்தில் 95 பேர் மரணமடைந்துள்ளனர். இந்த கடும் வெயில் மற்றும் அனல்காற்றை எதிர்கொள்ள முடியாமல் மக்கள் தவித்து வரும் நிலையில் மக்கள் இறப்பிற்கு மாகாண கவர்னர் கேட் ப்ரவுன் இரங்கல் தெரிவித்துள்ளார்.