1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: சனி, 14 டிசம்பர் 2019 (11:54 IST)

பயணத்தை தொடங்குகிறது நீராவி என்ஜின்..

சென்னையில் 100 ஆண்டுகள் பழமையான நீராவி என்ஜின் இன்று தனது பயணத்தை தொடங்குகிறது.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், பழமையை கொண்டாடும் வகையிலும், 100 ஆண்டுகள் பழமையான நீராவி என்ஜின் இன்று முதல் இயக்கப்படுகிறது.

சென்னை எழும்பூர்-கோடம்பாக்கம் இடையே 4 முறை இயக்கப்படும் இந்த நீராவி என்ஜினில் பயணம் செய்ய பெரியவர்களுக்கு 500 ரூபாயும் சிறியவர்களுக்கு 300 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இரண்டு வழிக்கட்டணமாக ரூ.1500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நீராவி என்ஜின் மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது ஆகும். இதற்கான முன்பதிவு மையம் எழும்பூர் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பழமை வாய்ந்த நீராவி என்ஜின் ரயில் இயக்கம் சென்னை மக்களை இன்ப அதிர்ச்சியில் தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.