திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: சனி, 14 டிசம்பர் 2019 (10:43 IST)

கடத்தலை தடுக்க சென்ற மூதாட்டிக்கு ஆசிட் வீச்சு..

பெண்ணை கடத்த முயன்ற போது, அதை தடுக்க முயன்ற மூதாட்டி ஆசிட் வீசி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குருசாமிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி தனம். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் இரண்டாவது மகளான விஜயா என்பவருக்கும், சாமுவேல் என்பவருக்கும் பல நாட்களாக தகாத உறவு இருந்துவந்துள்ளது.

காலப்போக்கில் விஜயாவின் சகோதரி மகளான வசந்தியை தவறான நோக்கத்தில் அணுகியுள்ளார் சாமுவேல். இதனால் தர்மபுரியில் வசித்து வந்த வசந்தி, நாமக்கல் குருசாமிப்பாளையத்தில் உள்ள பாட்டி தனம் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து வசந்தியை கடத்த திட்டமிட்டு தனம் வீட்டிற்கு சாமுவேல் வந்துள்ளார். வசந்தியை தன்னிடம் அனுப்புமாறு தனத்தை மிரட்டியுள்ளார். வசந்தியை சாமுவேல் கடத்த முயன்றபோது தனம் சாமுவேலை தடுக்க முயன்றதாகவும், பின்பு சாமுவேல் தன்னுடன் வைத்திருந்த ஆசிட்டை  தனத்தின் முகத்தில் ஊற்றியதாகவும் கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே தனம் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

பின்பு தனத்தின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் மூதாட்டியை கொன்ற சாமுவேலை அடித்து உதைத்தனர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீஸார் வந்தபோது சாமுவேல் உயிரிழந்து கிடந்துள்ளார். இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.