திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 26 அக்டோபர் 2021 (16:37 IST)

அலுவல் ரீதியாக அனுப்பிய கடிதம்… அவசியமில்லா விவாதம்..! – தலைமை செயலாளர் இறையன்பு விளக்கம்!

தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு துறை செயலாளர்களுக்கு அனுப்பிய கடிதம் குறித்து விளக்கமளித்துள்ளார்.

சமீபத்தில் தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து துறை செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பியிருந்தார். அதில் அரசு திட்டங்கள் குறித்து கவர்னருக்கு விளக்க தேவையான கோப்புகள் மற்றும் தரவுகளை தயார் செய்யும்படி சொல்லியிருந்தார்.

இதனால் மாநில அரசின் செயல்பாடுகளை கவர்னரிடம் காட்ட வேண்டியது ஏன் என தொடங்கி சமூக வலைதளங்கள் முதல் அரசியல் வட்டம் வரை பெரும் பரபரப்பு எழுந்தது. இந்நிலையில் இந்த கடித விவகாரம் குறித்து விளக்கமளித்து தலைமை செயலாளர் இறையன்பு ”துறை செயலாளர்களுக்கு அலுவல்ரீதியாக அனுப்பப்பட்ட கடிதம் அவசியமற்ற விவாத பொருளாக மாறி இருக்கிறது. வழக்கமான நிகழ்வுகளை அரசியல் பொருள் கொண்ட சர்ச்சையாக்குவது சரியானது அல்ல” என்று தெரிவித்துள்ளார்.