ஷாருக்கான் மகன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுப்பட்டுள்ளார் - என்.பி.சி
சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,அவர் போதைப் பொருள் கடத்தலிலும் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாகப் பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட சிலரை போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு 8 ஆம் தேதி முதல் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு முறை ஜாமீன் கேட்டு ஆர்யன் கான் கோர்டின் மனுதாக்கல் செய்தால் ஆனால் அவரது மனுவை கோர்டு தள்ளுபடி செய்தது.
இன்று மீண்டும் ஜாமீன் கேட்டு ஆர்யன் கான் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்துள்ளது.
இந்நிலையில், ஆர்யன்கான் போதைப்பொருள் பயன்படுத்துபவர் மட்டுமல்ல அவர் போதைப் பொருள் கடத்துபவர் எனவும் இந்த வழக்கில் தொடர்புடைய சாட்சியங்களையும் ஆதாரங்களையும் அவர் கலைக்க முயற்சிப்பார் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என போதைப்பொருள் தடுப்புப்பிரிபு நீதிமன்றத்தில் கூறியுள்ளது.