நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எப்போது? கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை.
சமீபத்தில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. தமிழ்நாட்டில் அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் காலை 11.30 மணிக்கு ஆலோசனை நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.