வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 4 செப்டம்பர் 2021 (11:31 IST)

உள்ளாட்சி தேர்தல் - அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆலோசனை

ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வரும் 6 ஆம் தேதி அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தவுள்ளது. 
 
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.
 
இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வரும் 6 ஆம் தேதி அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தவுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆலோசனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் குறித்து மாநில தேர்தல் ஆணையம் விளக்கும் என கூறப்படுகிறது.