1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Good News for Gold Buyers: Prices Continue to Fall!

இன்று ஒரே நாளில் 440 ரூபாய் குறைந்தது தங்கம்.. ஒரு சவரன் ரூ.70,000க்கு கீழ் வருமா?

Gold
தங்கம் ஒரே வாரத்தில் சவரனுக்கு சுமார் 2,500 ரூபாய் குறைந்திருப்பதால், வாடிக்கையாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ள நிலையில் இன்றும் தங்கம் குறைந்துள்ளது.
 
இன்று காலை வணிகம் தொடங்கியதும், ஒரு சவரன் தங்கத்தின் விலை 440 ரூபாய் குறைந்து 71,440 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் 55 ரூபாய் குறைந்து 8,930 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் ஒரே வாரத்தில் சவரனுக்கு சுமார் 2,500 ரூபாய் வரை குறைந்திருப்பதால், தங்க முதலீட்டாளர்களும் தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
வெள்ளி விலையும் கடந்த இரண்டு நாட்களுக்கு பிறகு ஒரு கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 119 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 1,19,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
இந்தத் தொடர் விலை சரிவு, தங்கம் வாங்க காத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
 
Edited by Mahendran
 
அடுத்த கட்டுரையில்
உடன்பிறப்பே வா.. ஓரணியில் தமிழ்நாடு.. விஜய்க்கு முன்பே பிரச்சாரத்தை துவக்கும் முதல்வர் ஸ்டாலின்..