ஊரக உள்ளாட்சி தேர்தல்: வெற்றியை சுவைத்தவர்கள் இன்று பதவியேற்பு!!
ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியின்றி மற்றும் போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்றுக்கொள்கின்றனர்.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் இரண்டு நாட்களாக நடந்த வாக்கு எண்ணும் பணிகள் முடிந்து இந்த தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றி பெற்றது. அதிமுக இரண்டாவது இடத்திலும், காங்கிரஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளது. மநீம, நாதக கட்சிகளுக்கு ஒரு சீட் கூட கிடைக்கவில்லை.
இந்நிலையில் இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு போட்டியின்றி மற்றும் போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்றுக்கொள்கின்றனர்.
இதனைத்தொடர்ந்து வரும் 22 ஆம் தேதி மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், துணைத் தலைவர், கிராம ஊராட்சித் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும்.