வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 4 செப்டம்பர் 2021 (09:00 IST)

உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடுதல் அவகாசம் - தேர்தல் ஆணையம் மனு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மேலும் அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல். 
 
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.
 
இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வரும் 6 ஆம் தேதி அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தவுள்ளது. வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் குறித்து மாநில தேர்தல் ஆணையம் விளக்கும் என கூறப்படுகிறது.
 
இதனிடையே தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மேலும் அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. செப்.15-க்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டிருந்த நிலையில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. 
 
ஏற்கனவே இரு முறை அவகாசம் கோரியிருந்த நிலையில் தற்போது 3வது முறையாக கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.