திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 18 நவம்பர் 2019 (15:47 IST)

டிசம்பர் 2; உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு..

டிசம்பர் 2 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வருகிற டிசம்பர் மாதம் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை அனைத்து கட்சிகளும் தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் டிசம்பர் 2 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி குறித்த அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.