செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : திங்கள், 18 நவம்பர் 2019 (14:33 IST)

”உள்ளாட்சி தேர்தலில் துரோகிகளை தோற்கடிப்போம்” டிடிவி தினகரன் பேட்டி

அமமுக நிச்சயமாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் என அக்கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ”அமமுக கட்சி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும்” என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும்” உள்ளாட்சி தேர்தலில் துரோகிகளை தோற்கடிப்பது தான் எங்களின் முக்கிய நோக்கம்” எனவும் கூறியுள்ளார்.

முன்னதாக அமமுக கட்சியை பதிவு செய்யும் பணி நடந்துகொண்டிருப்பதால், வேலூர் நாடாளுமன்ற தேர்தலிலும், விக்கிரவாண்டி நாங்குநேரி இடைத்தேர்தலிலும் அக்கட்சி போட்டியிடவில்லை. இந்நிலையில் தற்போது உள்ளாட்சி தேர்தலில் அமமுக போட்டியிடும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.