செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 16 ஜூன் 2020 (16:38 IST)

கொரோனாவில் இறந்தவருக்கு அருகிலேயே நோயாளி – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவரை படுக்கையிலேயே வைத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பும் பலியும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதுவும் தலைநகர் சென்னையில் தினமும் 1000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றனர்.

இதையடுத்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவால் இறந்த ஒருவரின் சடலம் பேக் செய்யப்பட்டு படுக்கையிலேயே வைக்கப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே நோயாளி ஒருவரும் படுத்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தை திமுக வைச் சேர்ந்த எழுத்தாளரான சல்மா தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.