1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 16 ஜூன் 2020 (15:09 IST)

ஒரே நாளில் 22 ... சென்னையில் அதிகரிக்கும் கொரோனா மரணம்!!

சென்னையில் இன்று ஒரு நாளில் இதுவரை கொரோனாவுக்கு 22 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை மாநகராட்சி வெளியிட்ட தகவலின் அடிப்படையில் சென்னையின் 15 மண்டலங்களிலும் சேர்த்து மொத்தம் 33,244 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 
 
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 5,364 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து தேனாம்பேட்டை மண்டலத்தில் இதுவரை 4,031 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 
மேலும் தண்டையார்பேட்டை மண்டலத்தில் 4226 பேர்களும், அண்ணாநகர் மண்டலத்தில் 3330 பேர்களும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 3539 பேர்களும், திருவிக நகரில் 2992 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில்சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனவுக்கு 22 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது நேற்றும் இன்றும் 44 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.