திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 6 டிசம்பர் 2018 (13:22 IST)

நெல் ஜெயராமன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல் செய்தி...

தமிழகத்தின் பாரம்பரிய நெல் விதைகளை மிட்டெடுத்த நெல் ஜெயராமன் இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தி அனைவரையும் துயரத்தில் ஆழ்த்திய நிலையில் அவரது உடல் நாளை அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யவிருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
நம் நாட்டில் முதுகெலும்பு விவசாயம்தான் என்று காந்தி கூறினார். அதற்கேற்ப பல நூற்றாண்டிலிருந்து இந்த நூற்றாண்டு வரை  நம் பாரம்பரிய நெல் நடவு முறைகளை இயற்கை விவசாயத்தை பேணுவதில் பலர் முன்னிலை  வகித்தனர். இதில் முக்கியமானவர்கள் தழிழ்நாட்டில் வாழ்ந்த நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன்.
 
நம்மாழ்வார் சில வருடங்களுக்கு முன்பு இறந்தது தமிழக விவசாயிகளை அதிகம் பாதித்துள்ள நிலையில் தற்போது நெல் ஜெயராமன் என்ற விவசாய ஆளுமையின் இறப்பும் விவசாய மக்களுக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது.
 
இந்நிலையில் திமுக தலைவர்  ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:
 
’நெல் ஜெயராமன் மறைவு ஓட்டுமொத்த தமிழக விவசாய மக்களுக்கு பேரிழப்பாகும். பாரம்பரிய நெல் விதைகளை பாதுகாத்து அதுகுறித்த விழிப்புணர்வை விவசாயத்தில் ஆர்வம் காட்டும் இளைய சமுதாயத்தினர் மத்தியில் கொண்டு சென்றவர்களில் முக்கியமாக கருதப்படுபவர் நெல் ஜெயராமன் .’இவ்வாறு ஸ்டாலின் கூறியிருக்கிறார்.