1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (15:02 IST)

’ஜனநாயக முகமூடி அணிந்த சில பாசிச சக்திகள்’.. சிலை உடைப்புக்கு ஸ்டாலின் கண்டனம்

வேதாரண்யத்தில் அம்பேத்கார் சிலை உடைக்கப்பட்டதற்கு  திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.  இதனால் கோபம் அடைந்த ஒரு தரப்பினர், அந்தக் காரை தீயிட்டுக் கொளுத்திவிட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த மற்றொரு தரப்பினர் ,தீயிட்டு கொளுத்திய மற்றொரு கும்பல் மீது ஆத்திமடைந்து பேருந்துநிலையத்தின் அருகே இருந்த அம்பேத்கார் சிலையை உடைத்தது. 
 
இதனையடுத்து வேதாரண்யத்தில் பதற்றமான சூழல் உருவானது. இங்கு அசம்பாவிதம் எதுவும் ஏற்படாம்ல் இருக்க உடனடியாக போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.
 
பின்னர் சிலை உடைக்கப்பட்ட அதே இடத்தில் இன்று காலையில் புதிய சிலை ஒன்று நிறுவப்பட்டது.
 
இந்நிலையில்  அம்பேத்கார் சிலை உடைக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டம் தெரிவித்துள்ளார்.
 
அவர் கூறியுள்ளதாவது :
வேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்காரின் சிலையை வஞ்சக நெஞ்சம் கொண்ட சிலர் சிதைத்த செயல் கண்டனத்திற்குரியது.  தமிழகம் முழுவதும் இத்தகைய சக்தியை வேரறுத்திட அதிமுக அரசு வேகமாகவும் விவேகத்துடனும் செயல்பட வேண்டும். அரசும், காவல்துறையும் சட்ட ஒழுங்குக்கு சவால்விடும் நிலையை வேடிக்கை பார்க்காமல் இதை உடனடியாக அடக்கி அப்புறப்படுத்த வேண்டும் . ஜனநாயக முகமூடி அணிந்த சில பாசிச சக்திகளின் விஷ விதைகள் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்காரின் சிலைகளை சிதைப்பது கண்டனத்துக்குரியது என கூறியுள்ளார்.