செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (12:16 IST)

30 வருடங்களாக அரசாங்கத்துக்கு ”அல்வா” கொடுத்த நபர்: யார் அந்த ஆசாமி??

பீகாரைச் சேர்ந்த ஒரு நபர் 30 வருடங்களாக ஒரே நேரத்தில் மூன்று அரசு பணிகளில் பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது.

பீகார் மாநிலம் கிருஷ்ணகஞ்ச் பகுதியில் சுரேஷ் ராம் என்பவர் வசித்து வசித்து வருகிறார். இவர் ஒரே நேரத்தில் மூன்று அரசாங்க பணிகளில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் மூன்று அரசு பணியிலும் ஒரே பெயர், ஒரே விலாசத்தைச் சேர்ந்த நபர் பணிபுரிவதை சந்தேகித்த அதிகாரிகள், சுரேஷ் ராமை விசாரணைக்கு அழைத்துள்ளனர். ஆனால் சுரேஷ் ராம் விசாரணைக்கு வராமல் தலைமறைவானார். அவரை தேடி பிடித்து கைது செய்து போலீஸார் விசாரித்தபோது தான், 30 வருடங்களாக இவ்வாறு மூன்று அரசு பணிகளில் பணியாற்றி சம்பளம் வாங்கிவந்தது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் வேடிக்கையான ஒன்றாகவும், அதிர்ச்சியான ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. இது குறித்து அரசாங்க அதிகாரிகள் சுரேஷ் ராமை விசாரித்து வருகின்றனர்.