வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (10:54 IST)

விண்வெளியில் இருந்து முதல் புகார்: விசாரணை நடத்துமா நாசா?

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து முதல் முதலாக நாசாவுக்கு ஒரு புகார் வந்துள்ளது.

அமெரிக்க, கனடா, ஜப்பான், ரஷ்யா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை நிறுவியுள்ளன. இதில் பல நாடுகளைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த அன்னே மெக்லைன் என்னும் விண்வெளி ஆராய்ச்சியாளர் விண்வெளியில் இருந்தபோது குற்றச்செயலில் ஈடுபட்டு வந்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அன்னே மெக்லைன் 6 மாதங்கள் விண்வெளியில் தங்கி ஆய்வில் ஈடுபட்டு வந்தார். கடந்த ஜூன் மாதம் மிண்டும் நாடு திரும்பினார்.

இந்த புகாரை சம்மர் வுடன் என்பவர் கொடுத்துள்ளார். சம்மர் வுடன், அன்னேயின் தற்பாலின துணை ஆவார். சம்மரின் சொந்த வங்கி கணக்கை தான், அனி வின்வெளியில் இருந்தபோது கையாண்டதாக அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து அன்னேயிடம் நாசா விசாரணை நடத்த முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அனி மெக்லைன் தனது டிவிட்டர் பக்கத்தில், “ இந்த புகாரில் எந்த உண்மையும் இல்லை, துர் அதிர்ஷ்டவசமாக ஒரு வேதனையான சூழலில் நாங்கள் இருவரும் தனிதனியே பயணித்து வருகிறோம்” என பதிவிட்டு உள்ளார்.

மேலும் இது தான் விண்வெளியிலிருந்து நாசாவுக்கு வந்த முதல் புகார் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.