திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 2 செப்டம்பர் 2018 (14:06 IST)

விஜயகாந்த் மீண்டும் வர வேண்டும் - ஸ்டாலின் வாழ்த்து

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் பொதுவாழ்வு பணிகளை தொடர வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 
சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற விஜயகாந்த், கருணாநிதியின் மறைவிற்கு பின் திரும்பி வந்தார். விமான நிலையத்திலிருந்து நேரடியாக கருணாநிதியின் சமாதிக்கு சென்ற அவர் நடக்க முடியாமல், சுற்றி நடப்பதை உணரமுடியாமல் நின்ற விதம் அந்த வீடியோவை பார்த்த பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
 
இந்நிலையில்தான், நேற்று முன் தினம் அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், சர்க்கரை, தொண்டையில் செய்த அறுவை சிகிச்சை, தைராய்டு ஆகிய பிரச்சனைகளுக்கு அவருக்கு  மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் செய்திகள் வெளியானது. அவர் நன்றாக இருக்கிறார். உடல் நலம் பெற்று விரைவில் திரும்புவார் என தேமுதிக தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. பின் அவர் நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும் செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் “மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியிருக்கும் தேமுதிக தலைவர் திரு.விஜயகாந்த் அவர்கள் மேலும் முழுமையான அளவில் விரைந்து உடல்நலன் பெற்று,பொதுவாழ்வுப் பணிகளை முன்னெப்போதும் போல் தொடரவேண்டும் என்ற எனது விழைவினைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக்குறிப்பிட்டுள்ளார்.