1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Stalin will participate in Kumarasamy Inauguration function

குமாரசாமி பதவியேற்பு விழா - ஸ்டாலின் பங்கேற்பு

குமாரசாமி
கர்நாடக முதலமைச்சராக குமாரசாமி பதவியேற்கும் விழாவில் ஸ்டாலின் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் எடியூரப்பா அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்னரே ராஜினாமா செய்துவிட்ட நிலையில்  கர்நாடக கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் குமாரசாமி. 
 
இதனையடுத்து வரும் புதன்கிழமை கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்க முடிவு செய்துள்ளார். இந்த பதவியேற்பு விழாவில்  தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி ஆகியோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் முன்னாள் பிரதமர் தேவகவுடா அழைப்பு விடுத்துள்ளார். 
 
இந்த அழைப்பினை ஏற்றுக் கொண்ட திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், குமாரசாமி பதவியேற்பு விழாவில் பங்கேற்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்: தினகரன்